மஹிந்திரா குழுமம் என்பது 20.7 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கொண்ட ஒரு நிறுவனக் குழுமம் ஆகும், இது புதுமை இயக்கத் தீர்வுகள், கிராமப்புற செழிப்பை உந்துதல், நகர்ப்புற வாழ்க்கையை மேம்படுத்துதல், புதிய வணிகங்களை வளர்ப்பது மற்றும் சமூகங்களை வளர்ப்பது ஆகியவற்றின் மூலம் மக்களை உயர்த்த உதவுகிறது. இது இந்தியாவில் பயன்பாட்டு வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம், நிதிச்சேவைகள் மற்றும் வேகேஷன் ஓனர்ஷிப் ஆகியவற்றில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது, மேலும் இது எண்ணிக்கை அளவில், உலகின் மிகப் பெரிய ட்ராக்டர் நிறுவனம் ஆகும். இது வேளாண் வர்த்தகம், விண்வெளி, வணிக வாகனங்கள், உதிரிபாகங்கள், பாதுகாப்பு, தளவாடங்கள், ரியல் எஸ்டேட், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், வேகப் படகுகள் மற்றும் இரும்பு வர்த்தகத்துறையிலும் இது வலிமையாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட மஹிந்திரா நிறுவனம் 100 நாடுகளில் 2,40,000- க்கும் அதிகமான பணியாளர்களுடன் இயங்குகிறது.
மஹிந்திரா பற்றி மேலும் விவரம் அறிவதற்கு: www.mahindra.com /ட்விட்டர் மற்றும் பேஸ்புக்: @MahindraRise