BLAZO புரட்சி, எரிபொருள் சேமிக்க ஸ்மார்ட்டான வழி
                                    தனித்துவமான FuelSmart சுவிட்சுகள் மூலம், எரிபொருள் சிக்கனம் மற்றும் மைலேஜை மேம்படுத்தும் தற்போதுள்ள டெக்னாலஜியை மஹிந்திரா மேம்படுத்தியுள்ளது.
                                    
                                    
                                    CRDeயின் பலன்கள்
                                    
                                    மஹிந்திரா எப்போதும் முன்னோக்கு சிந்தனையை பயன்படுத்துகிறது. 9 நாடுகளில் உள்ள CRDe இன்ஜின்களில் ஒரு தசாப்தத்திற்கும் மேலான அனுபவத்தில் இது பிரதிபலிக்கிறது. இது செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை விட்டுக் கொடுக்காத மலிவான டெக்னாலஜி ஆகும். மஹிந்திராவின் CRDe இன்ஜின்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இயங்கி வருகின்றன. 
                                    mPOWER FuelSmart பொருத்தப்பட்ட, மஹிந்திரா BLAZO X BS6 குறைந்த மாற்றங்களுடன் பயன்படுத்தி பரிசோதிக்கப்பட்டு, சவாலான இந்திய போக்குவரத்து முகத்தையே மாற்றியுள்ளது.
                                    
                                    ஸ்மார்ட்டான இதயம்
                                    
                                    7.2 லிட்டர் டிஸ்ப்ளேஸ்மென்ட் (இடப்பெயர்ச்சி) கொண்ட மஹிந்திராவின் mPOWER FuelSmart இன்ஜின் மிகப் பெரிய ரிஸர்வ் திறன் மற்றும் பத்தாண்டுகளுக்கும் மேலான CRDe நிபுணத்துவத்தின் பலன்களைக் கொண்டுள்ளது. இந்த எஞ்சின் மல்டி-மோட் ஸ்விட்ச் உடன் ஒப்பிட முடியாத பர்ஃபார்மென்ஸை வழங்குகிறது. உங்களுக்கு பவர், பிக்-அப் அல்லது இழுவைத் திறன் தேவைப்படும் போது இது எந்த மாற்றமும் இல்லாத மைலேஜை வழங்குகிறது.
									
									மேலும் வரும் ஆண்டுகளில் தூய்மை சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வகையில் இயங்குவதற்காக, இந்த இன்ஜின் உமிழ்வைக் குறைக்கிறது.
                                    
                                        