ஆட்டோ எக்ஸ்போ 2018
பிப்ரவரி 7, 2018
ஆட்டோ எக்ஸ்போ 2018 இல் மஹிந்திரா டிரக் மற்றும் பஸ்
ஆட்டோ எக்ஸ்போ 2018 இல், மஹிந்திரா டிரக் & பஸ் ஸ்டாலைப் பார்வையிடுவதற்கான முக்கிய காரணங்கள். அஜய் தேவ்கனுடன் ஒரு புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு* மற்றும் பல.
* ஆக்மென்டட் ரியாலிட்டி மூலம் அஜய் தேவ்கனுடன் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு.
ஆட்டோ எக்ஸ்போ 2018 என்பது ஆட்டோமோட்டிவ் துறையின் எதிர்காலத்திற்கான நுழைவாயிலாகக் கருதப்படலாம். ஆட்டோமோட்டிவ் துறையின் முன்னணி நிறுவனங்கள், தங்களின் சமீபத்திய மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்த, இந்தக் கண்காட்சி சிறந்த தளமாகும். உற்சாகமூட்டும் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் வழக்கமான நிலைப்பாட்டைத் தவிர, மஹிந்திரா டிரக் மற்றும் பஸ் (MTB) ஸ்டாலில் இருக்கும் எதிர்கால கமர்ஷியல் வாகனங்களை எதிர்காலத்தில் ஏற்றுக்கொள்வது இந்த நிகழ்வில் ஒரு சிறப்பு ஈர்ப்பாக இருக்கும். ஆம், நீங்கள் படித்தது சரிதான்!
டிரக் மற்றும் பஸ்கள் இனி லோடிங் திறன் மற்றும் பயன்பாட்டுக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கப்படுவதில்லை. அவை சிறப்பம்சங்கள் மற்றும் உயரிய பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. டிரைவர்களும் பயணிகளும் அதிக அளவில் வாகன வடிவமைப்பின் மையப் புள்ளியாக மாறி வருகின்றனர். மேலும் இதுபோன்ற பகுதிகளில் புதுமைகள் ஏராளமாக உள்ளன. இதன் அர்த்தம் கமர்ஷியல் வாகன (CV) உற்பத்தியாளர்கள், பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை தங்கள் வடிவமைப்புகளில்முன்னணியில் வைப்பது மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
ஆட்டோ எக்ஸ்போ 2018 இல், இந்தியாவின் முதல் ஸ்மார்ட் டிரக்: BLAZO 49 மற்றும் எலக்ட்ரிக் பஸ்: eCOSMO ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதன் மூலம், மஹிந்திரா இந்த அலைவரிசையின் முன்னணியில் இருப்பதாக பார்க்கப்படும். ஆக்மென்டட் ரியாலிட்டியை அவர்கள் எளிமையாகப் பயன்படுத்தியதையும் மறந்துவிட முடியாது. ஆனால் நாம் அதை விரைவில் அடைவோம்.
மஹிந்திரா டிரக் மற்றும் பஸ்களில் இருந்து ஆட்டோ எக்ஸ்போவில் நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம்:
BLAZO 49-இந்தியாவின் முதல் ஸ்மார்ட் டிரக்:
மஹிந்திரா டிரக்ஸ் மற்றும் பஸ், அதன் HCV வகை BLAZO டிரக்குகளை பிப்ரவரி 2016 இல் அறிமுகப்படுத்தியது, அதன் பின்னர், சுமார் 10,000 விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது மஹிந்திராவின் முதல் ஸ்மார்ட் டிரக் ஆகும். டிரக்குகள் வெளியில் மட்டுமின்றி, உள்ளேயும் அதிநவீனமானதாகத் தோற்றமளிக்கின்றன. மேலும் CV துறையில் மைலேஜ், சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் கிடைக்கும் உத்தரவாதத்துடன் வருகின்றன. சிறந்த எரிபொருள் திறனுக்கான FuelSmart தொழில்நுட்பம், சிறந்த தகவல்களுக்கான Digisense (டிராக்கிங், ட்ரிப் திறன், எரிபொருள் சிக்கனம் போன்றவை) மற்றும் பல பாதுகாப்பு அம்சங்கள் டிரக்குகளில் உள்ளன. இப்போது, மஹிந்திரா டிரக் மற்றும் பஸ், ஆட்டோ எக்ஸ்போ 2018 இல் தொடரின் 'ஸ்மார்ட் பதிப்பை' காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது.
டிரைவர் மற்றும் ஃப்ளீட் உரிமையாளருக்கு பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துதல் மற்றும் ஒட்டுமொத்த டிரைவிங் அனுபவத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடிய பல மேம்பட்ட அம்சங்களுடன் மஹிந்திரா BLAZO ஸ்மார்ட்டிரக்கை உருவாக்கியுள்ளது.
இந்த சிறப்பம்சங்கள்:
- அல்ட்ராசோனிக் ரிவர்ஸ் பார்க்கிங் சென்ஸார்ஸ் கொண்ட ரிவர்வ்ஸ் கேமரா
- ஃபார்வர்டு கொலீஷன் வார்னிங்
- ஹிஸ்–ஸ்டார்ட் அசிஸ்ட்
- ஆட்டோ–டிப் பீம்
- ஹெட்ஸ்–அப் டிஸ்ப்ளே
- டயர் பிரஷர் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்
- மழை மற்றும் லைத் சென்ஸார்ஸ்
பாதுகாப்பு அம்சங்களைத் தவிர, BLAZO 49 ஸ்மார்ட்ட்ரக்கில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் சன்ரூஃப் கொண்ட டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவை இருக்கும்.
மஹிந்திரா eCOSMO எலக்ட்ரிக் பஸ்
ஆபத்தான தட்பவெப்ப நிலை மற்றும் அதிகரித்து வரும் மாசுபாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறைகள் காலத்தின் தேவையானதாக இருக்கின்றன. 2030 ஆம் ஆண்டிற்குள் ஆல் எலெக்ட்ரிக் டிரான்ஸ்போர்ட் சிஸ்டத்திற்கு (முழுமையான மின்சார போக்குவரத்து முறை) மாற்றுவதற்கான இந்திய அரசின் திட்டத்தால் இதற்கு ஒரு வலிமை கிடைத்துள்ளது.
2030-க்குள் முழு மின்சார போக்குவரத்து முறைக்கு நகரும் அரசின் திட்டம்.
EV பிரிவில் முன்னணியில் இருக்கும் மஹிந்திரா, மாசில்லா போக்குவரத்து முறைகளின் முக்கியத்துவத்தை பெரிதும் உணர்ந்துள்ளது. இந்த திசையில் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள சில வாகன உற்பத்தியாளர்களில் இதுவும் ஒன்றாகும்.
எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் கார்கள் (ரேவா மற்றும் e2oPlus) தயாரிப்பதில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அதன் விரிவான அனுபவத்தைப் பயன்படுத்தி, மஹிந்திரா டிரக் மற்றும் பஸ், ஆட்டோ எக்ஸ்போ 2018 இல் தனது மின்சார பஸ் - eCOSMO ஐ காட்சிப்படுத்தியது.
இது டைரெக்ட் டிரைவ் எலெர்க்டிகல் மோட்டராக இருக்கும், எனவே கியர்பாக்ஸ் இல்லை. நீண்டகாலம் உழைக்கும் லித்தியம்-அயன்பேட்டரியுடன் வருகிறது, இது ஒரு கேம்சேஞ்சராக இருக்கும்.
அஜய் தேவ்கனுடன் ஃபோட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்*
இப்போது நீங்கள் எதிர்பார்த்த விஷயம் என்னவென்றால், MTB ஸ்டாலில் இது ஈர்ப்பு மையமாக இருந்த விஷயம்தான். ஸ்டாலுக்கு வருபவர்களுக்கு அஜய் தேவ்கனுடன் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது, அது வெர்ச்சுவல் (மெய்நிகர்) என்றாலும். ஆக்மென்டட் ரியாலிட்டியை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி, மஹிந்திரா டிரக் மற்றும் பஸ் ஸ்டாலில் அஜய் தேவ்கனின் 3டி ஹாலோகிராம் வைக்கப்பட்டிருந்தது. சூப்பர் ஸ்டாருடன் போட்டோ க்ளிக் செய்ய ரசிகர்கள் ஆவலாக இருந்தனர் என்பதை சொல்லத் தேவையேயில்லை.